00:00
04:22
தூவானமே ஒரு தேடல் நீ தந்தாய்
தூவானமே ஒரு தேடல் நீ தந்தாய்
கனவாய் நினைவாய் நிஜத்தின் கலமாய் உயர்ந்து நிக்க
தூவானமே ஒரு தேடல் நீ தந்தாய்
♪
இயற்கை எனும் ஒரு மௌனம்
அழகியலாய் அதன் வதனம்
வரங்கள் ஆகாதோ ஆ
இயற்கை எனும் ஒரு மௌனம்
அழகியலாய் அதன் வதனம்
வரங்கள் ஆகாதோ
வீணையாய் இசை வீணையாய்
கோடையாய் குளிர் வாடையாய்
மனதினில் மகிழ் நிலையாய்
தூவானமே ஒரு தேடல் நீ தந்தாய்
♪
படர்ந்து நிக்கும் மழை மேகம்
பனி மலரோ மனம் ஏங்கும்
நிறங்கள் விழி ஏறும்
படர்ந்து நிக்கும் மழை மேகம்
பனி மலரோ மனம் ஏங்கும்
நிறங்கள் விழி ஏறும்
வாசமாய் மது வாசமாய்
நேசமாய் வளர் நேசமாய்
புது வித அனுபவமாய்
தூவானமே ஒரு தேடல் நீ தந்தாய்
கனவாய் நினைவாய் நிஜத்தின் கலமாய் உயர்ந்து நிக்க
தூவானமே ஒரு தேடல் நீ தந்தாய்